Webdunia - Bharat's app for daily news and videos

Install App

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

vinoth
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:11 IST)
கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.

அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்து ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் அவுட் ஆகி வெளியேறும் போது தோனி மிகுந்த அதிருப்தியோடு மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இது பற்றி பேசிய முன்னாள் சி எஸ் கே வீரர் ஹர்பஜன் சிங் “தோனி அன்றைய போட்டி முடிந்ததும் ஆத்திரத்தில் சுவரில் இருந்த டிவி திரையில் குத்தினார். இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு எமோஷன் இருக்கும்” எனக் கூறியிருந்தார். ஆனால் ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து ஆதாரமற்ற பொய் என்று சி எஸ் கே அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments