தோனியை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது…. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:33 IST)
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தோனியை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியதால ரிச்சர்ட் மேட்லி கூறியுள்ளார்.

ஐபிஎல் ஏலம் என்றதும் நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவர் ரிச்சர்ட் மேட்லி. பல வருடங்களாக ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை அறிமுகப்படுத்தி, ஏலத்தை சுவாரஸ்யமாக நடத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யுடியூப் பக்கத்தில் அவரை நேர்காணல் செய்தார்.

அப்போது ஐபிஎல் முதல் ஏலத்தின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார் மேட்லி. அதில் ‘2008 ஆம் ஆண்டு ஆக்‌ஷனில் தோனியை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடுமையான போட்டி நிலவியது. மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேதான் கடைசி வரை போட்டி நிலவியது. சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் ஒருவர் தேவைப்பட்டதால் அவர்கள் தோனியை 15 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு எடுத்தனர்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்: இரட்டை சதத்தை நெருங்கினார் ஜெய்ஸ்வால் !

ஐபிஎல் கப் அடிச்சே ஆகணும்! மனதை கல்லாக்கி சிஎஸ்கே எடுத்த முடிவு! முக்கிய வீரர்கள் விடுவிப்பு?

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. ஜெய்ஸ்வால் அபார சதம்.. சாய் சுதர்சன் அரைசதம்.. ஸ்கோர் விவரங்கள்..!

ரோஹித்துக்கு நடப்பது, எனக்கும் நடந்தது… ஷுப்மன் கில்லை முன்னிறுத்துவது குறித்து கங்குலி கருத்து!

ரசிகர்களோடு பேச மொழி தடையாக இருந்தது இல்லை… தோனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments