Publish Date: Fri, 28 Feb 2025 (14:22 IST)
Updated Date: Fri, 28 Feb 2025 (14:45 IST)
கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அது அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார் என்பதுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்தது. இதனால் வரும் சீசனில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்தடைந்த தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கானப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.