Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று பாருங்கள்… ரசிகரிடம் கூறிய தோனி – பின்னணி என்ன?

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (07:35 IST)
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். 2019 ஆம் ஆண்டு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அவர் இப்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இப்போது துபாயில் நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் தோனி உணவகம் ஒன்றில் ரசிகர் ஒருவரோடு பேசுவது போன்று அந்த வீடியோ உள்ளது.

அதில் ரசிகரிடம் தோனி “நீங்கள் வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு சென்று பாருங்கள். அங்கு உணவு வகைகள் எல்லாம் மிகவும் அற்புதமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments