நாட் அவுட் ஆக இருப்பதால் இப்படி சௌகர்யம் இருக்கா… ஐபிஎல் 2024 சீசனில் தோனி படைத்த சாதனை!

vinoth
வியாழன், 2 மே 2024 (08:38 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சி எஸ் கே அணி 7 விக்கெட்களை இழந்து 162 ரன்கள் சேர்த்தது. இதனை அடுத்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்தது.  இது சென்னை அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும் இதனால் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு சிக்கலாகி வருகிறது.

இந்த போட்டியில் தோனி 11 பந்துகள் சந்தித்து 14 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இந்த சீசனில் தோனி அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்த சீசனில் தோனி ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த சீசனில் அதிக சராசரி உள்ள வீரர்களில் தோனி முதல் இடத்தில் உள்ளார். அவரின் ஆவரேஜ் 110 ஆக உள்ளது.

அதே போல 100 ரன்களுக்கு மேல் சேர்த்தவர்களின் ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 229. டெல்லி அணியின் ஜேக் பிரேசர் 233 ஸ்ட்ரைக் ரேட்டோடு முதலிடத்தில் உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments