Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியின் இந்த ஒரு டைவ் போதுமே.. முழு விருந்து சாப்பிட்ட திருப்தியில் சி எஸ் கே ரசிகர்கள்!

Advertiesment
தோனியின் இந்த ஒரு டைவ் போதுமே.. முழு விருந்து சாப்பிட்ட திருப்தியில் சி எஸ் கே ரசிகர்கள்!

vinoth

, புதன், 27 மார்ச் 2024 (07:15 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் முக்கியமானப் போட்டிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 206 ரன்கள் சேர்த்தது.

சென்னை அணி சார்பாக ரச்சின் ரவீந்தரா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் 46 மற்றும் ஷிவம் துபே 51 ரன்கள் சேர்க்க அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த போட்டியில் தோனியின் பேட்டிங்கைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அவர் கடைசி வரை பேட் செய்யவே இல்லை.

பின்னர் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சி எஸ் கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விஜய் சங்கர் பேட் செய்யும் போது பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பை நோக்கி செல்ல கீப்பிங் செய்த தோனி ஒரு அட்டகாசமான டைவ் அடித்து அந்த கேட்ச்சைப் பிடித்தார். 42 வயதில் இப்படி ஒரு டைவ்வா என ரசிகர்கள் வாய்பிளந்தனர். தோனியின் பேட்டிங்கைக் காண முடியாவிட்டாலும் இந்த கேட்ச் ஒன்றே போதும் என பலரும் சமூகவலைதளத்த்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரம்பமே அபாரம்.. சிஎஸ்கேவுக்கு 2வது வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!