இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (16:37 IST)
சர்வதேசக் கிரிக்கெட் தொடர்களை விட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான லீக் தொடராக மாறி வருகிறது ஐபிஎல். உலகில் கிரிக்கெட் விளையாடும் (பாகிஸ்தான் தவிர) நாட்டு வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

இந்த தொடரின் ஐகான்களில் ஒருவராக இருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த சில ஆண்டுகளாக தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. ஆனாலும் அவரை தற்போது சி எஸ் கே அணி அன்கேப்ட் ப்ளேயர் எனும் விதியின் மூலம் தக்கவைத்துள்ளது. மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கினாலும் ரன் எதுவும் சேர்க்கவில்லை.

இந்நிலையில் தோனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் “இம்பேக்ட் ப்ளேயர் விதி பற்றிய பேச்சு வந்தபோது, நான் இப்போதே ஐபிஎல் தொடர் மிகவும் சிறப்பாகதான் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் இதற்கு மேலும் அதனை மேம்படுத்தத் தேவையில்லை என்று கூறினேன். ஆனாலும் அந்த விதி நடைமுறைக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவும்தான். ஆனால் நான் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments