Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணிக்கு நல்ல செய்தி… முழு உடல்தகுதியுடன் திரும்பும் வீரர்!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (15:48 IST)
சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் தீபக் சஹார். ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக தீபக் சஹார் தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை. இது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் தனித்துவம் மிக்கவராக தீபக் சஹார் செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆண்டு சென்னை அணியின் மோசமான தோல்விக்கு தீபக் சஹார் இல்லாததும் ஒரு காரணமாக அமைந்தது என்று கூறலாம். இந்நிலையில் இப்போது 100 சதவீத உடல்தகுதியோடு தான் இருப்பதாக தீபக் சஹார் கூறியுள்ளார்.

காயங்களில் இருந்து மீள கடந்த 3 மாதங்களாக கடுமையாக உழைத்துள்ள அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முழு தகுதியுடன் தயாராகி வருவதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

தோனியிடம் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.. சி எஸ் கே பயிற்சியாளர் ஓபன் டாக்!

தோனியை unfollow செய்த ருத்துராஜ்… சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் பிரச்சனைதான் என்ன?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணிக்கு வரப்போகும் 17 வயது இளம் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments