Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி சொல்ற அட்வைசை கவனமா கேட்டுக்கோ! – இளம் பந்துவீச்சாளருக்கு தீபக் சஹார் அறிவுரை!

Webdunia
புதன், 4 மே 2022 (17:50 IST)
நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸின் இளம் பந்து வீச்சாளருக்கு தீபக் சஹார் அறிவுரை வழங்கியுள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது.

சென்னை அணியின் புதிய பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி அணிக்காக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான தீபக் சஹார் காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடவில்லை.

இந்நிலையில் சஹார் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து முகேஷ் சவுத்ரி பேசியுள்ளார். அதில் அவர் “சூழ்நிலையை உணர்ந்து எப்படி பந்து வீசுவது என்று சொல்லியிருக்கிறார். போட்டியின் ஆரம்ப காலக்கட்டத்தில் நான் நன்றாக வீசவில்லை. அப்போது தீபக் சாஹர் எனக்கு போன் செய்து  ஆலோசனை வழங்கினார். ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை எடுத்த போது சாஹர் என்னை பாராட்டினார். குறிப்பாக தோனி கூறும் ஆலோசனையை கேள் என கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments