ஆஸி. அணிக்கு அடுத்த கேப்டன் நானா? டேவிட் வார்னரின் பதில் இதுதான்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:06 IST)
ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு பதில் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது “செல்போன் எனது பக்கத்திலேயே உள்ளது. ஆஸி கிரிக்கெட் வாரியத்தில் இருந்து என்னை அழைத்தால் அதற்கு பதிலளிக்க ஆர்வமாக உள்ளேன்.  விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் பால் டேம்பரிங் சர்ச்சையால் அவருக்கு கேப்டன்சி செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதை நீக்க அவர் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

வங்கதேசத்தை நீக்கினால் உலக கோப்பை தொடரில் நாங்களும் விலகுவோம்: பாகிஸ்தான்

கோஹ்லி, ரோஹித்துக்கு ரூ.4 கோடி சம்பளம் குறைப்பா? பிசிசிஐ சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments