ஆஷஸ் தொடரில் சேவாக்கின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (07:10 IST)
நடந்து முடிந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி பரபரப்பான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதில் டேவிட் வார்னர் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக டெஸ்ட் போட்டிகளில் சேவாக் எடுத்த ரன்களைக் கடந்துள்ளார். சேவாக் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 8207 ரன்கள் சேர்த்துள்ளார். இப்போது வார்னர் 8208 ரன்கள் சேர்த்து சேவாக்கை முந்தியுள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் அலஸ்டர் குக் 11845 ரன்களோடு முதல் இடத்தில் உள்ளார்.  அடுத்த இடத்தில் சுனில் கவாஸ்கர்(9607), கிரீம் ஸ்மித்(9030), மேத்யு ஹைடன் (8625) ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments