என் கைகள் இப்போதும் பரபரவென்று இருக்கின்றன… டேவிட் வார்னர் தூது!

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (07:50 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் ஆஸி அணி சரியான தொடக்க ஆட்டக்காரர் இல்லாமல் தடுமாறி வருகிறது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பேசிய வார்னர் “சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணிக்காக நான் தேர்வுசெய்யப்பட்டால் விளையாட தயாராக இருக்கிறேன். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து பிரான்ச்சைஸ் கிரிக்கெட்டில் விளையாடுவேன்” என்று கூறியிருந்தார். ஆனால் அவரை மீண்டும் அணியில் எடுக்கும் எண்ணம் இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது வார்னர் மீண்டும் ஆஸி அணி நிர்வாகத்துக்குத் தூது விடும் விதமாகப் பேசியுள்ளார். அதில் “உண்மையாக அவர்கள் என்னை விரும்பினால், நான் மீண்டும் அணிக்குத் திரும்ப ஆவலாக உள்ளேன்.  நான் சரியான காரணத்துக்காகவே ஓய்வு பெற்றேன். ஆனால் அவர்களுக்கு நான் தேவைப்பட்டால் கண்டிப்பாக நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

மகளிர் பிரீமியர் லீக் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி - மும்பை மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments