ரிஷப் பண்ட்தான் இந்திய அணியின் X ஃபேக்டர்… ஆஸி கேப்டன் பாராட்டு!

vinoth
புதன், 23 அக்டோபர் 2024 (07:33 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து நடந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தார். இந்நிலையில் அவர் வங்கதேசம் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.

விரைவில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவர் குறித்து ஆஸி அணிக் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார். அதில் “இந்திய அணியின் மிடில் ஆர்டரின் X ஃபேக்டராக ரிஷப் பண்ட்தான் இருக்கப் போகிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments