சிஎஸ்கே விற்கு எதிராக டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மாலை 4 மணிக்கு மோதுகின்றன.
இந்நிலையில் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் போட, டோனி டெய்ல் என அழைத்தார். இதில் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி கண்டு, பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. அதே போல் ஹைத்ராபாத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் வெற்றி கண்டு, நெட் ரன் ரேட் படி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பட்டியிலில் முன்னேற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.