இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

vinoth
திங்கள், 20 மே 2024 (07:53 IST)
நடந்துவரும் ஐபிஎல் சீசனில் சி எஸ் கே அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் அளவுக்கு சி எஸ் கே வெற்றிக்கு ஆர்வமாக இருக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

இதுபற்றி பலரும் பல கருத்துகளை விமர்சனமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் நக்கலாக ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் “தோனி ஓய்வை அறிவித்துவிட்டால் சி எஸ் கே அணிக்கான ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள். அவர்கள் மற்ற மைதானங்களில் நடக்கும் சி எஸ் கே போட்டிக்கு வரமாட்டார்கள்.

தோனிக்கு இப்போது 42 வயதாகிறது. இன்னும் ஒரு சீசனில் அவரால் விளையாட முடியாது. அடுத்த சீசனில் அவர் விளையாடினால், விரலில் ஒரு சிறு காயம் இருந்தால் கூட அவரின் வயது காரணமாக அது முகத்தில் தெரிந்துவிடும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

இன்னும் மக்கள் ஏன் இதிலிருந்து வெளிவரவில்லை? விராத் கோலி முன்னாள் காதலியின் பதிவு வைரல்..

இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: சுப்மன் கில், பும்ரா இல்லையா? இளம் வீரர்களுக்கு வாய்ப்பு?

6 போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ் கெய்க்வாட்.. சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி போகிறதா?

அடுத்தடுத்து தவறான முடிவெடுத்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்.. கஜினியை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments