Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் கடவுளே..! ஓடி வந்து தோனி காலில் விழுந்த ரசிகர்! – வைரலாகும் வீடியோ!

Advertiesment
MS Dhoni

Prasanth Karthick

, சனி, 11 மே 2024 (13:31 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனியை பார்க்க மைதானத்திற்கு இளைஞர் ஒருவர் அத்துமீறி ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.



ஐபிஎல் லீக் போட்டிகள் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 231 ரன்கள் அடித்திருந்த நிலையில், சிஎஸ்கே அணி 196 ரன்களே அடித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

எனினும் கடைசி ஓவர்களில் தோனி களமிறங்கி 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டி நடந்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு சிஎஸ்கே ரசிகர் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்து உள்ளே ஓடி வந்தார். அவரை கண்டதும் தப்பி ஓடுவது போல தோனி விளையாடினார். ஓடி வந்த ரசிகரோ தோனியின் காலில் விழுந்து வணங்கினார். அவரை எழுப்பி தோல் மேல் கைப்போட்டு பேசியபடி தோனி சென்றார். பின்னர் பாதுகாப்பு ஊழியர்கள் வந்து இளைஞரை அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.எல்.ராகுலை திட்டி செங்கோட்டையில கொடி ஏத்திட்டீங்களா? – LSG உரிமையாளரை கிழித்தெடுத்த முகமது ஷமி!