Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியோடு டிரேடிங் குறித்து பேசவில்லை… சி எஸ் கே CEO தகவல்!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (09:45 IST)
சில தினங்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ரோஹித் ஷர்மா இருக்கும்போதே அந்த அணிக்கு கேப்டனாகிறார் ஹர்திக் பாண்ட்யா. இது அந்த ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான உடனே மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கங்களை ரசிகர்கள் அன்பாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸின் ஜெர்சியை அணிந்துகொண்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இதன் மூலம் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் மூலம் கைப்பற்ற போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அணியின் சி ஈ ஓவான காசி விஸ்வநாதன் “நாங்கள் அணிகளுக்கு இடையே டிரேடிங் செய்வதை ஒரு கொள்கையாக விரும்பவில்லை. மும்பை இந்தியன்ஸ் வீரர்களை டிரேடிங் செய்ய நாங்கள் அவர்களிடம் பேசவுமில்லை” எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓவல் டெஸ்ட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் பும்ரா இல்லை..!

என்னது சானியா மிர்சா பயோபிக்கில் அக்‌ஷய் குமாரா?... செம்ம நக்கல்தான்!

கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

கே எல் ராகுலை 25 கோடி ரூபாய்க்கு வாங்க ஆர்வம் காட்டும் KKR.. !

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments