Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை மாயம்… போலீஸ் விசாரணைக்குப் பின் கண்டுபிடிப்பு!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (08:08 IST)
இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியவர் கேதர் ஜாதவ். ஐபிஎல் போட்டிகளில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்புகள் இல்லை.  இந்நிலையில் கேதர் ஜாதவின் தந்தை மகாதேவ் ஜாதவ் திங்கள்கிழமை புனே வீட்டில் இருந்து காணாமல் போன சில மணி நேரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது சம்மந்தமாக அலங்கர் காவல்நிலையத்தில் கேதர் ஜாதவ் அளித்த புகாரின்படி, டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட அவரது 75 வயது தந்தை, காலை நடைப்பயணத்திற்காக கோத்ருட் வீட்டை விட்டு வெளியேறி, வீட்டு வளாகத்தின் வாயிலில் இருந்து வெளியேறிய நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. போலீஸாரின் தேடுதலில் முந்த்வா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்பாகவும் உடல்நலத்தோடும் தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments