Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபி எடுக்க மறுத்த பிருத்வி ஷா… கோபத்தில் ரசிகர்கள் நடத்திய தாக்குதல்!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:14 IST)
இந்திய அணிக்காக மிகச்சிறந்த அறிமுகம் பிருத்வி ஷாவுக்குக் கிடைத்தாலும், அவரால் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.  சமீபகாலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பிருத்வி ஷா அணியில் இடம் கிடைக்காதது விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு டி 20 அணியில் இடம் கிடைத்தது. ஆனால் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் நண்பர்களோடு உணவருந்த சென்ற போது, ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுக்கக் கேட்டுள்ளனர்.

அதற்கு பிருத்வி ஷா மறுத்து, மேலும் ஹோட்டல் மேலாளரிடம் புகார் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.  இதனால் கோபமடைந்த அந்த ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்து பேஸ்பால் பேட்டால் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் வந்த காரையும் சேதப்படுத்தியுள்ளனர். இது சம்மந்தமாக போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட 8 பேரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

உனக்குப் பின்னால் நான் இருக்கிறேன் ரஜத்… புதுக் கேப்டனுக்கு ஆதரவளித்த கோலி!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவரா? விராத் கோலி ரசிகர்கள் அதிருப்தி..!

நாங்கள் செய்த தவறை உங்கள் முன் விவாதிக்க முடியாது- கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஆர் சி பி அணிக்கு புதிய கேப்டன் யார்?... இன்று வெளியாகும் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments