Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னுடைய பேட் மிகப்பெரியது : பெண் செய்தியாளரிடம் ஆபாசமாக பேசிய கெயில்

என்னுடைய பேட் மிகப்பெரியது : ஆபாச சர்ச்சையில் கெயில்

Advertiesment
என்னுடைய பேட் மிகப்பெரியது : பெண் செய்தியாளரிடம் ஆபாசமாக பேசிய கெயில்
, சனி, 21 மே 2016 (13:40 IST)
பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் ஆபாசமாக பேசி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கெயில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


 

 
சமீபத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில், தொலைக்காட்சி தொகுப்பாளினியிடம் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியவர் கெயில். இதற்காக அவருக்கு 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
 
மேலும், அவரது அறைக்கு உணவு கொண்டு வந்த பெண்ணிடம், தனது துண்டை அவிழ்த்து, தனது ஆணுறுப்பை காட்டியதாகவும் ஒரு அவர் மீது புகார் கூறப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் கெயில்.
 
தற்போது அவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி வருகிறார். இங்கிலாந்தை சேர்ந்த தி டைம்ஸ் பத்திரிக்கையின் பெண் நிருபர் கர்லோடே எட்வர்ட்ஸ், அவரிடம் பேட்டியெடுத்தார். 
 
அப்போது அவரிடம் பேசிய கெயில் “பெண்கள் ஆண்களுக்கான சம உரிமைய தாண்டி வளர்ந்து விட்டனர். எனது அழகில் மயங்கி என் மீது விழுகிறார்கள். நான் சிறந்த ஆட்டக்காரன் என்கிறார்கள்.
 
காரணம், என்னிடம் உள்ள பேட் உலகிலேயே மிகவும் பெரியது. கனமானது. அதை உங்களால் ஒரு கையால் துக்க முடியாது. அதற்கு இரு கைகள் வேண்டும்” என்று இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியுள்ளார்.
 
இதைப்பற்றி அந்த பெண் பத்திரிக்கையாளர் தற்போது வெளியே கூறியுள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிக்கு ஆப்பு வைக்க திட்டம் தீட்டும் ஹர்பஜன் சிங்