Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் 'முத்தமிழறிஞர் கருணாநிதி ஸ்டேண்டை' திறந்துவைத்த முதல்வர் முக.ஸ்டாலின் !

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (19:02 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிதாகக் கட்டப்பட்ட கேலரியை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் திரந்து வைத்தார்.

சென்னை மெரினாவுக்கு அருகிலுள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூரு கிரிக்கெட் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தை அதிநவீன வசதிகளுடன் ரூ.139 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மைதானத்தை இன்று முதல்வர் முக. ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு,புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேலரிக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணா நிதியில் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஐசிசி மற்றும் பிசிசிஐ –  ன் தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் வந்து போட்டிகளைக் காண்பர் எனத் தெரிகிறது.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments