நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் சி எஸ் கே மற்றும் கே கே ஆர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணியில் ரஹானே, மனிஷ் பாண்டே மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் சிறப்பாக விளையாட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.
அதன்பிறகு ஆடிய சி எஸ் கே அணி 6 ஓவர்களிலே 65 ரன்கள் சேர்த்தாலும் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் வெற்றி பெறுவது கடினமான நிலையில் இளம் வீர்ர டிவால்ட் பிரவிஸ் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். இதன் காரணமாக சென்னை அணி 20 ஆவது ஓவரில் 183 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது.
சென்னை அணிக்காக முதல் போட்டியில் ஆடிய உர்வில் படேல் அதிரடியாக ஆடி 11 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் 23 நாட்களுக்குப் பிறகு தங்கள் மூன்றாவது வெற்றியை ருசித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.