Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 26 ஏப்ரல் 2025 (13:19 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த சீசனில் சென்னை அணித் தங்கள் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஐந்து முறைத் தோற்றுள்ளது. இதுவரை எந்தவொரு சீசனிலும் இப்படி அதிகபட்சத் தோல்விகளை சந்தித்ததில்லை. இந்தத் தோல்விகள் காரணமாக சி எஸ் கே எப்போதும் நிபந்தனையில்லாத அன்பைக் கொடுத்து வரும் ரசிகர்களே சோர்ந்து போயுள்ளனர்.

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த ஆண்டு சென்னை அணியில் இருக்கும் வீரர்களில் 70 சதவீதம் பேர் அடுத்த சீசனில் நீக்கப்படுவார்கள். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என யாருமே அணிக்காப பங்களிக்கவில்லை. சென்னை அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்ததே இல்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்தடுத்தத் தோல்விகள்… இந்த ஆண்டில் மட்டும் சி எஸ் கே அணி இழந்த பெருமைகள்!

தோனியின் ஆட்டத்தைப் பார்க்கவந்த AK.. தோல்வியிலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments