சென்னை சின்னசாமி மைதானத்தில் பழைய கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வீரர்களுக்கான அதி நவீன அறைகளுடன் கூடிய புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்திய அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த மைதானம் சென்னை சேப்பாக்கம் மைதானம்தான். அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க 85 ஆண்டுகால பழமைவாய்ந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக போட்டிகள் நடக்கவில்லை. ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்துவருகின்றன. மேலும் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதாக மூன்று கேலரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மைதானத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டும் நான்கு மாதத்துக்குள் 80 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளோடு புதிய கேலரிகள் மற்றும் வீரர்களின் ஓய்வறை ஆகியவைக் கட்டப்பட உள்ளன.