பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய நாட்டு கொடி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாட்டு கிரிக்கெட் அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படும் நிலையில், பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என இந்தியா மறுத்தது.
இதனால் இந்திய அணியின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த ஐசிசி ஏற்பாடு செய்தது. அதன்படி இந்திய வீரர்கள் தற்போது துபாய் சென்று பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்காக கராச்சி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்தியா நாட்டுக் கொடியை தவிர பிற 7 நாட்டுக் கொடிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாட வராததால் இந்திய அணியின் கொடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Edit by Prasanth.K