Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியின் போக்கையே மாற்றிய சஹாலின் ஒரு ஓவர்…!

vinoth
வியாழன், 1 மே 2025 (06:50 IST)
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் ஆகிய அணிகள் மோதிய போட்டி பரபரப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் சாம் கரணின் அபாரமான ஆட்டத்தால் மீண்டெழுந்தது.

18 ஆவது ஓவரில் அந்த அணி 175 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் 19 ஆவது ஓவரை சஹால் வீசிய நிலையில் அந்த ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதில் ஒரு ஹாட்ரிக்கும் அடக்கம். அவரின் இந்த ஓவரால் சென்னை அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணி இலக்கை 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.

இதன் காரணமாக பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பை சஹால் அதிகப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சஹால்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

அடுத்த கட்டுரையில்
Show comments