டெல்லி விளையாட்டு மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்: விராட் கோலிக்கு பட கண்காட்சி

வியாழன், 12 செப்டம்பர் 2019 (09:27 IST)
டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த பாஜக முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டுவிழா இன்று நடைபெறுகிறது.

பாஜக முக்கிய தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் அருண் ஜெட்லி. மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி. அவர் தலைவராக இருந்தபோது கிரிக்கெட்டுக்காக முக்கியத்துவம் கொடுத்து, புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட்டை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது அவரது மறைவை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட இருக்கிறது.

இன்று நடைபெறும் பெயர் சூட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். புதிதாக புணரமைக்கப்பட்ட அந்த மைதானத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரில் சிறப்பு கேலரி ஒன்று திறக்கப்படுகிறது. மெலும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லியின் சாதனைகள் குறித்த அனிமேசன் படம் ஒன்றும் திரையிட இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கு இந்தியாதான் காரணமா ? – இலங்கை அமைச்சர் பதில் !