Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை !

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (14:15 IST)
இயக்குநர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை !
ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படிப்பிடிப்பில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
 
இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் காயம் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் ஆவார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்கள் இறந்தவர்களின் கும்பத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். மேலும் சிலர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
 
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணையை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மத்தியகுற்றப்பிரிவுக்கு மாற்றினார்.
 
இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் இறந்தது பற்றி இயக்குநர்  ஷங்கரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
 
நேற்று தனது டுவிட்டர் பக்கதில் ஷங்கர் பதிவிட்டுள்ளதாவது :' மிகுந்த மனவருத்தத்தில் இந்த டுவீட்டை பதிவிடுகிறேன். அன்று நடந்த விபத்து பற்றி அதிர்ச்சியில் இருந்தும், எனது உதவி இயக்குநர் மற்றும் குழுவினருக்கான இழப்புகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை ; தூக்கமில்லாத இரவுகளாக உள்ளது. நூலிழையில் நான் உயிர் தப்பினேன். இறந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 'இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments