காயம் காரணமாக இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாத நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பும்ரா காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. மேலும் இந்திய அணியின் 8 பொசிஷன்களிலும் பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்களை நிரப்பியதும் பலரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் பும்ரா ப்ளேயிங் 11ல் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பதற்காக பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பும்ரா உள்ளே வந்தால் பந்துவீச்சாளரான சிராஜ் அல்லது ப்ரசித் கிருஷ்ணா யாரவது ஒருவர் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் இரண்டு இன்னிங்ஸிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவர் அணியில் தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K