Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

vinoth
புதன், 18 ஜூன் 2025 (07:25 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சீனியர் வீரரான பும்ராவுக்கு கேப்டன்சி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் ஏன் கேப்டன்சி பொறுப்பை ஏற்கவில்லை என்பது குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார். அதில் “நான் இது சம்மந்தமாக பிசிசிஐ உடன் பேசிக் கொண்டிருந்தேன். எனது முதுகுவலிப் பிரச்சனையை கவனிக்கும் குழுவுடன் நான் ஆலோசித்த போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போது நான் பிசிசிஐக்கு அழைத்து என்னால் கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் என்னால் ஐந்து டெஸ்ட் போட்டிகளையும் விளையாட முடியாது. ஏனென்றால் 3 டெஸ்ட் போட்டிகளுக்கு ஒருவரும், மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருவரும் கேப்டனாக செயல்பட்டால் அது சரியாக இருக்காது. அதனால் நான் அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த முடிவை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments