Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

vinoth
வியாழன், 7 நவம்பர் 2024 (09:31 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது.  இந்திய அணி முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியக் கேப்டன் ரோஹித் ஷர்மா “நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.  நியுசிலாந்து அணி எங்களை விட எல்லா விதத்திலும் சிறப்பாக விளையாடினர். நான் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சரியாக விளையாடவில்லை.  ஒரு அணியாக நாங்கள் சரியாக விளையாடத் தவறிவிட்டோம். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார். ஆனாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அடுத்து நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் அவர் குடும்பக் காரணங்களுக்காக விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். முதல் போட்டியில் கேப்டன் இல்லையென்றால் அது அணிக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள அவர் “ஒருவேளை முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா இல்லை என்றால் துணைக் கேப்டன் ஆன பும்ரா தொடர் முழுவதையும் தலைமையேற்று நடத்த வேண்டும். அப்போதுதான் அணிக்குள் ஒரு தொடர்ச்சி இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments