Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பவுலிங்குக்கே எனக்கு ஃபீல்ட் செட் செய்யத் தெரியாது – பும்ரா ஓபன் டாக்!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (07:42 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக வரலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “முதலில் எனக்கு ஆடுகளத்தில் ஃபீல்ட் செட் செய்யவே தெரியாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தபோது கூட, ரோஹித் ஷர்மாவிடம் சென்று என்ன மாதிரியான பந்து வீசப்போகிறேன் என சொல்லிவிட்டு, நீங்களே ஃபீல்ட் செட் செய்துவிடுங்கள். எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது. கிரிக்கெட்டில் நாம் எல்லாவற்றுக்கும் பிறரை நம்பியிருக்கக் கூடாது என்று. பின்னர்தான் எனக்கான ஃபீல்ட் செட்டை அமைக்கக் கற்றுக்கொண்டேன்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments