நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

vinoth
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (08:09 IST)
இந்திய அணியின் நட்சத்திர பவுலரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ரா சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றினாலும் அவர் இருக்கும் போட்டிகளில் இந்திய அணி தோல்விகளையேப் பெறுகிறது.  பும்ராவின் டெஸ்ட் அறிமுகத்துக்குப் பிறகு அவர் விளையாடியுள்ள 46 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றியும் 22 போட்டிகளில் தோல்வியும் 4 போட்டிகளில் டிராவும் பெற்றுள்ளது. இதில் வெற்றி சதவீதம் 43. அதே நேரம் பும்ராவின் அறிமுகத்துக்குப் பிறகு அவர் இல்லாத 27 போட்டிகளில் 19ல் வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 70. ஆனால் பும்ரா இல்லாத போட்டிகள் பெரும்பாலும் இந்தியாவில் நடந்தவை என்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலமில்லாத அணிகளோடு நடந்த போட்டிகள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இங்கிலாந்து தொடரிலும் அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. அவர் விளையாடாத மற்றபோட்டிகளில்தான் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் இது குறித்து பேசும்போது “நீங்கள் மூத்த வீரராக இருக்கும்போது நிறைய பொறுப்புகள் உள்ளன.  பும்ரா விளையாடிய போட்டிகளில் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால் நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் பும்ராவின் செயல்பாடு அந்த அளவுக்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments