குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள்: புதிய சாதனை படைத்த பும்ரா!

சனி, 24 ஆகஸ்ட் 2019 (13:28 IST)
வெஸ்ட் இண்டீஸுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பும்ரா டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி புதியன் சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான இரண்டு நாள் டெஸ்ட் தொடர் ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 296 ரன்களை குவித்தது. அடுத்ததாக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோவை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் ஜாஸ்ப்ரித் பும்ரா. இதன்மூலம் குறைந்த டெஸ்ட் தொடர்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் பும்ரா.

முகமது ஷமி 13 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இதுவரை முதல் சாதனையாக இருந்தது. தற்போது 11 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி ஷமியை பின்னுக்கு தள்ளியுள்ளார் பும்ரா.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து..