பர்ப்பிள் கேப்பைட் தட்டி தூக்கிய பூம்ரா… சொல்லி அடித்த கில்லி!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:38 IST)
நேற்று நடந்த குவாலிபையர் போட்டியில் எளிதாக வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டுகளில் ஒன்றாக கருதப்படுபவர் பூம்ரா. ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் அவர் பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்தார். இது அவர் மேலான அழுத்தத்தை அதிகமாக்கியது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது அவரை 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீச அழைத்தது. அப்போது பந்து பழையதாகி விடுவதால் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் தொடக்க ஓவர்களை வீச அனுமதிக்கப்பட்டார்.

அதிலிருந்து அவரின் பழைய ஆட்டம் மீண்டும் வந்தது. பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்களை சாய்த்து வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம் 27 விக்கெட்களை சாய்த்து பர்ப்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 உலகக்கோப்பை 2026: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

சென்னையில் இன்று ஜிம்பாவேவுக்கு எதிரான போட்டி.. அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஜிம்பாவே படுதோல்வி.. மேற்கிந்திய தீவுகள் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தோல்வி அடைந்தாலும் டி20 உலகக்கோப்பையில் பும்ரா செய்த சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8.. தெ.ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments