Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சப்போர்ட்டுக்கு யாரும் வரமாட்டாங்க… வாழ்த்து சொல்ல எல்லோரும் வருவாங்க – மும்பை இந்தியன்ஸை தாக்கி பும்ரா பதிவு!

Advertiesment
சப்போர்ட்டுக்கு யாரும் வரமாட்டாங்க… வாழ்த்து சொல்ல எல்லோரும் வருவாங்க – மும்பை இந்தியன்ஸை தாக்கி பும்ரா பதிவு!
, வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:56 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பௌலர் பும்ரா 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதல் முறையாக நம்பர் 1 இடத்தை எட்டியுள்ளார். ஏற்கனவே டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தை அவர் ஏற்கனவே வகித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

மும்பை இந்தியன்ஸ் அணியும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்நிலையில் தனக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் பும்ரா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் “நமக்கு சப்போர்ட் செய்பவர்கள் ஒருசிலரே. ஆனால் வாழ்த்து சொல்பவர்கள் ஆயிரம் பேர்” என்பது போல பதிவிட்டுள்ளார். இது மறைமுகமாக மும்பை இந்தியன்ஸ் அணியை தாக்குவது போல அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைக்கும் ஒரே இந்திய வீரர் பும்ராதான்!