டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த மெக்கல்லம்

டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்த மெக்கல்லம்

சனி, 19 டிசம்பர் 2015 (17:54 IST)
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகப் போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர் டி வில்லியர்ஸின் சாதனையை, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் முறியடித்துள்ளார்.
 

 
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளி அன்று தொடங்கியது.
 
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகப் போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மார்ச் 2004ஆம் ஆண்டு முதல், இன்று வரை தொடர்ச்சியாக 99 போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
 
முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் டிசம்பர் 2004ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2015ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 98 போட்டிகளில் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதனை தற்போது மெக்கல்லம் முறியடித்துள்ளார்.
 
தொடர்ச்சியாக அதிகப் போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியல்:
 
1. பிரண்டன் மெக்கல்லம் [நியூசிலாந்து]- 99 போட்டிகள் - 2004ஆம் ஆண்டு மார்ச் முதல் இன்று வரை.
 
2. ஏபி டி வில்லியர்ஸ் [தென் ஆப்பிரிக்கா] - 98 போட்டிகள் - 2004ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2015ஆம் ஆண்டு ஜனவரி வரை.
 
3. ஆடம் கில்கிறிஸ்ட் [ஆஸ்திரேலியா] - 96 போட்டிகள் - 1999ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2008ஆம் ஆண்டு ஜனவரி வரை.
 
4. ராகுல் திராவிட் [இந்தியா] - 93 போட்டிகள் - 1996ஆம் ஆண்டு ஜூன் முதல் 2005ஆம் ஆண்டு டிசம்பர் வரை.
 
5. சச்சின் டெண்டுல்கர் [இந்தியா] - 86 போட்டிகள் - 1989ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2001ஆம் ஆண்டு ஜூன் வரை.

வெப்துனியாவைப் படிக்கவும்