Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த போட்டியில் நான்கு ஸ்பின்னர்களையும் இறக்குவோம்… இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் தடாலடி!

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (10:07 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “ இங்கிலாந்து வீரர்கள் பின்பற்றும் பாஸ்பால் அனுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டங்களையும் வியூகங்களையும் வகுப்போம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் விசாகப்பட்டிணத்தில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ளார். அதில் “இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களிடம் உள்ள நான்கு ஸ்பின்னர்களையும் ஆடவைக்கவும் வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார். விசாகப்பட்டணம் மைதானமும் சுழல்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments