Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலமுறை தற்கொலைக்கு முயன்றேன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் பகீர்

பலமுறை தற்கொலைக்கு முயன்றேன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் பகீர்

Advertiesment
Brad hogg
, திங்கள், 31 அக்டோபர் 2016 (18:13 IST)
மன அழுத்தம் காரணமாக தான் பல முறை தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

 
2003 மற்றும் 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக்கோப்பை பெற்ற போது, பிராட் ஹாட் முக்கிய பங்கு வகித்தார். 2008ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், சமீபத்தில் தனது சுயசரியதை புத்தகத்தை வெளியிட்டார். அதில் பல சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பு தகவல்களை அவர் கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்,  திருமண பந்தமும் முறிந்து போனதால் அதிகமாக மது அருந்தினேன்.  எதிலும் மனநிறைவு கிடைக்கவில்லை. எனவே தற்கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.
 
ஒரு நாள் ஒரு கடற்கரை ஓரம் நடந்து சென்றேன். கடலை வெறித்துப் பார்த்த படி தற்கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். சில தூரம் நீந்திச் சென்றேன். ஆனால் என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியவில்லை. இப்படி பல முறை முயன்றேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்துவிட்டேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியுடன் எனது காதல் முறிந்துவிட்டது: அனுஷ்கா சர்மா