Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து விக்கெட்டை சாய்க்கும் புவனேஸ்வர் குமார்: வங்கதேசத்தை வதம் செய்ய ஆரம்பிக்கும் இந்தியா!

அடுத்தடுத்து விக்கெட்டை சாய்க்கும் புவனேஸ்வர் குமார்: வங்கதேசத்தை வதம் செய்ய ஆரம்பிக்கும் இந்தியா!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:51 IST)
இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி வருகிறார்.


 
 
மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதிப்போட்டியில் வென்று பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ள நிலையில் இந்தியா-வங்கதேச அணிகள் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மோதி வருகிறது.
 
இந்த போட்டி இன்று மதியம் 3 மணிக்கு பிர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதில் இந்தியா சிறப்பாக பந்துவீசி அசத்தலாக விளையாடி வருகிறது.
 
முதல் ஓவரின் இறுதிப்பந்தில் சௌமியா சர்க்காரின் விக்கெட்டை ஸ்டெம்பை தெறிக்கவிட்டு தூக்கினார் புவனேஸ்வர் குமார். அடுத்ததாக களமிறங்கிய சப்பிர் ரஹ்மானின் விக்கெட்டை புவனேஸ்வர் குமார் 6-வது ஓவரில் வீழ்த்தினார். 4 ஓவர்கள் போட்டுள்ள புவனேஸ்வர் குமார் 16 ரன்கள் கொடுத்து இதுவரை 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் 45 ரன்கள் எடுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments