Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென் ஸ்டோக்ஸ் நியுசிலாந்துக்காகவே விளையாட விரும்பினார்… ராஸ் டெய்லர் சுயசரிதையில் கருத்து

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (09:17 IST)
நியுசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை தற்போது எழுதி வெளியிட்டுள்ளார்.

நியுசிலாந்து அணியின் மூத்த வீரரான ராஸ் டெய்லர் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். 37 வயதாகும் டெய்லர் நியுசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகள், 233 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். நியுசிலாந்து அணிக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரராக ராஸ் டெய்லர் இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு அவர் இப்போது தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் பென் ஸ்டோக்ஸ் பற்றி யாரும் அறியாத விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “பென் ஸ்டோக்ஸுடன் நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் போது நியுசிலாந்து அணிக்காக விளையாடுகிறீர்களா எனக் கேட்டேன். அவரும் பிறந்த நாட்டுக்காக விளையாட ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். இது சம்மந்தமாக நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் தகவல் அனுப்பினேன். ஆனால் அவர் அதை சரியாக அனுகவில்லை. அவர்கள் உடனடியாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர்தான் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்” எனக் கூறியுள்ளார். தற்போது ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குக் கேப்டனாகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments