Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

vinoth
வெள்ளி, 9 மே 2025 (08:22 IST)
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய முப்படை பாகிஸ்தானின் 9 இடங்களில் குறிவைத்துத் தாக்கியது. தீவிரவாதிகள் முகாமைதான் தாக்கினோம் என்று இந்தியா சார்பில் சொல்லப்பட்டாலும், மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டை வைத்தது.

இதையடுத்து பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்த, இந்தியாவும் பதிலடித் தாக்குதல் நடத்துகிறது. இதன் காரணமாக இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் உள்ளது. இதன் காரணமாக நேற்று இமாச்சலின் தரம்ஷாலா மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் ஐபிஎல் தொடர் பாதுகாப்புக் காரணங்களால் இரத்து செய்யப்படலாம் என சொல்லப்படும் நிலையில் அது குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதிலளித்துள்ளார். அதில் “இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.  கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம்.  தொடரைத் தொடர்ந்து நடத்துவது சம்மந்தமான முடிவினை இன்று எடுக்கவுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments