இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவி காலம் உலகக்கோப்பை போட்டியோடு முடிந்துவிட்டது. இருப்பினும் அடுத்த மாதம் நடக்கும் தொடருக்காக அவர்களது பதவி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதவி நீட்டிக்கப்பட்டாலும் புதிய பயிற்சியாளர் தேர்விற்கான விளம்பரத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட இருக்கிறது. இந்த தேர்வுக்கு ரவி சாஸ்திரியை விண்ணப்பிக்குமாறும் இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளதாம்.
எனவே, ரவி சாச்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.