மாடல் நகரை மையப்படுத்தி ஐபிஎல் தொடரில் புதிய டீம்? – அடுத்த சீசனில் களமிறக்க முடிவு!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (08:16 IST)
ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகளில் புதியதாக ஒரு அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிசிசிஐயின் ஐபிஎல் டி20 போட்டிகள் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. 2008 முதலாக தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 13 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற பல அணிகள் ஐபிஎல் ஆரம்பம் தொட்டே இருந்து வந்தாலும், இடையே டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் போன்ற சில அணிகள் வந்து பின்னர் காணாமல் போயின.

தற்போது ஐபிஎல் தொடரில் மொத்தமாக 8 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் 9வது அணி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்த மாநிலமான குஜராத்தை மையப்படுத்தி அந்த அணி உருவாக்கப்பட இருப்பதாகவும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஐ;பிஎல் வீரர்கள் ஏலத்தின்போது இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments