Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!

vinoth
புதன், 22 ஜனவரி 2025 (08:22 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது.

அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.

இந்நிலையில் இப்போது மற்றொரு பிரச்சனையைக் கிளப்பியுள்ளது பிசிசிஐ. தங்கள் ஜெர்ஸியில் தொடரை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க முடியாது என பிடிவாதம் பிடிக்கிறதாம். ஆனால் கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் போது இந்தியா வந்த பாகிஸ்தான் அணி, இந்தியாவின் பெயரை தங்கள் ஜெர்ஸியில் அச்சடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments