Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாயை விட்ட ராகுல், பாண்ட்யா – முதல் ஒருநாள் போட்டியில் தடை

Advertiesment
வாயை விட்ட ராகுல், பாண்ட்யா – முதல் ஒருநாள் போட்டியில் தடை
, வெள்ளி, 11 ஜனவரி 2019 (19:08 IST)
காஃபி வித் கரண் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரியக் பதில்களைக் கூறிய  இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தடை விதித்துள்ளது பிசிசிஐ.

சமீபத்தில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் பங்குபெற்ற காஃபி வித் கரண் ஜோஹர் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.

இதையடுத்து பாண்ட்யா மற்றும் ராகுலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் அடுத்த 24 மணிநேரத்துக்குள் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு ம்விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சர்ச்சைகள் பெரிதானவுடன் பாண்ட்யா தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் ‘உண்மையில் எனக்கு யாரையும் புண்படுத்தவோ நோகடிக்கவோ சிறிதும் எண்ணம் இல்லை. நான் நிகழ்ச்சியின் போக்கில் உற்சாகமாகி அப்படிக் கூறிவிட்டேன்’ என விளக்கமளித்துள்ளார். ஆனால் ராகுலிடம் இருந்து இன்னும் எந்த விளக்கமும் வரவில்லை.

நோட்டீஸ் அனுப்பியது ஒருபுறம் இருப்பினும் ஆஸ்ஹிரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்கியுள்ள முதல் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலில் இருவர் பெயரையும் பர்சீலிக்க வேண்டாமென தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியை புகழ்ந்து தள்ளிய ரோஹித் சர்மா !