Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சர்! – பிசிசிஐ அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:00 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்மை ஸ்பான்சராக புதிய நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பல்வேறு உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். இந்த அணிகளுக்கு முதன்மை ஸ்பான்சர் ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அந்த வகையில் 2023 வரை முதன்மை ஸ்பான்சராக பேடிஎம் நிறுவனம் தேர்வாகி இருந்தது. இந்த ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் தற்போது முதன்மை ஸ்பான்சரை மாஸ்டர் கார்ட் நிறுவனத்திற்கு வழங்க பேடிஎம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணி போட்டிகளுக்கு மாஸ்டர் கார்டு நிறுவனம் முதன்மை ஸ்பான்சராக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளூர் ஆட்டங்களுக்கு மட்டுமே மாஸ்டர் கார்டு ஸ்பான்சர் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments