Webdunia - Bharat's app for daily news and videos

Install App

INDvsBAN: தோல்வியை தவிர்க்க விடாமல் போராடும் வங்கதேச வீரர்கள்!

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (15:16 IST)
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்க்ஸ் முடிந்த நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் இன்று நடைபெற்று வருகிறது. 
 
டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம், இந்தியாவின் அபாரமான பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாத வங்கதேசம் 58 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இரண்டாவதாக களம் இறங்கிய இந்தியா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 114 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் எடுத்தது இந்தியா. மயங்க் அகர்வால் இரட்டை சதத்தை விளாசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். விராட் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆனாலும் புஜாரா, ரஹானே மற்றும் ஜடேஜா தலா ஒரு அரை சதத்தை வீழ்த்தி வங்கதேசத்தை திணறடித்தார்கள்.
 
வங்கதேசத்தை விட 343 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்தியாவை இரண்டாவது இன்னிங்ஸில் வங்க தேசம் வெற்றிக்காக போராடி வருகிறது. 64 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது வந்கதேச அணி. 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments