Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியன் கேம்ஸ்களுக்கான மைதானத்தைக் கிண்டல் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட்டர்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:54 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதையடுத்து இப்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சுப்ரமண்யன் பத்ரிநாத், ஆசியன் கேம்ஸ் போட்டிகளுக்கான கிரிக்கெட் மைதானங்கள் அளவில் மிகச்சிறியவையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. பவுண்டரியின் நீளம் 50 மீட்டருக்குக் குறைவாகதான் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதைக் குறிப்பிட்டு நக்கல் செய்யும் விதமாக பத்ரிநாத் “இதுதான் மைதானம் என்றால், நானும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 43 வயதாகும் பத்ரிநாத் சில ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments