Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்குள் அரசியல் செய்யும் பாபர் ஆசாம்… குற்றச்சாட்டுகளை அடுத்து கேப்டன் பதவியை இழக்கிறாரா?

vinoth
செவ்வாய், 9 ஜூலை 2024 (07:44 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. அந்த அணி கத்துக்குட்டி அணிகளிடம் மோதிய போது மிக எளிதாக வெற்றி பெறவேண்டிய போட்டிகளை போராடிதான் வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது. அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த அணியின் டி 20 கிரிக்கெட்டுக்கு மட்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் அணியைப் பற்றி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர் பேசும்போது “பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமையே இல்லை. இது ஒரு அணியே கிடையாது. வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. அனைவரும் தனித்தனியாக உள்ளனர். எத்தனையோ அணிகளோடு பணியாற்றியுள்ளேன். ஆனால் இதுபோல ஒரு அணியை நான் பார்த்ததில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்களை செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாம். இதனால் பயிற்சியாளர் உள்ளிட்ட தேர்வுக்குழு தலைவர்கள் அனைவரையும் ஆலோசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமாக அணி வீரர்கள் உடல் தகுதி மற்றும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைதல் ஆகியவற்றைக் களைய வேண்டும் என பலரும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பாபர் ஆசாம் தான் அணிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால் அவரிடம் இருந்து டி 20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments